பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத்தளபதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 9ம் திகதியிலிருந்து அமுலாகும்படி இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் M.R. லதீப் ஓய்வுபெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-தலை நகர செய்தியாளர்-