வருகின்ற ஜூன் மாதத்தின் நடுப்பகுதி முதல் இலங்கைக்கு குறிப்பிட்டளவான சுற்றுளாப்பயணிகளை அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வருகின்ற சுற்றுலாப்பயணிகள் கொரோனா பாதிப்புக்குட்பட்வர்களா இல்லையா என பரிசோதிப்பதற்கு கட்டுநாயக்கா மற்றும் மத்தளை விமான நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி வரவழைக்கப்படுகின்ற சுற்றுலாப்பயணிகள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்போவதாக சுற்றுலாத்துறையின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதற்கிடையில் ஜூலை மாதத்தில் மேலும் சுற்றுலாப்பயணிகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.