கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு – திமுத் கருனாரத்ண.
அண்மைக் காலங்களில் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் தொடக்க வீரர்களில் ஒருவராக இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன திகழ்கிறார்.
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, அவர் 40.96 என்ற சராசரியில் 1,352 ரன்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 66 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களும் 24 அரைசதங்களும் பெற்றுள்ள இவர் கூறுகையில் ” அந்த 24 அரைசதங்களில் சிலதை சதங்களாக மாற்றியிருக்க முயற்சித்து இருக்க வேண்டும் என சிலர் கூறுவது போல் செய்திருந்தால் அது உண்மையிலேயே எனது துடுப்பாட்ட தர வரிசைக்கு மேலும் வலு சேர்த்து இருக்கலாம்.
இருந்தும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொன்றை புதிதாக கற்றுக்கொண்டு இருக்கிறேன் 25 சதங்களும் 50க்கு மேற்பட்ட துடுப்பாட்ட சராசரியும் இலங்கை கிரிக்கட் அணியை ஒரு நாள் , டெஸ்ட் போட்டி தர வரிசைகளில் முதல் நான்கு இடங்களுக்குள் கொண்டு செல்வதுமே என்னுடைய இலக்கு எனவும் கூறினார். மேலும் இலங்கை அணியானது அண்மையில் வெளியான சர்வதேச கிரிக்கட் தரவரிசைகளில் முறையே டெஸ்டில் 5 வதும் ஒருநாள் போட்டிகளில் 8வதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.