மேலதிக அறிவிப்பு வரும்வரை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், மறுஅறிவித்தல் வரும்வரைக்கும் களுத்துறை மற்றும் புத்தளம் உட்பட 23 மாவட்டங்களிலும் இரவு 8மணியிலிருந்து காலை 5மணி வரைக்கும் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், திட்டமிட்டபடி கொழும்பிலுள்ள தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தங்களது வேலைகளை நாளை11/05/2020 முதல் தொடங்கலாம் எனவும், மீண்டும் இயல்புவாழ்க்கை திரும்பும் வரைக்கும் முந்தைய அறிவிப்புக்களில் சேர்க்கப்பட்ட நிபந்தனைகள் தொடரும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.