இந்திய கிரிக்கட் வாரியத்துடன் நேரடி ஒப்பந்தமில்லாமல் இருக்கும் இந்திய கிரிக்கட் வீரர்களை வெளிநாடுகளில் நடக்கும் டுவென்டி/ டுவென்டி தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் வீரர் சுரேஷ் ரெயினா.
இன்ஸ்டாகிராமில் இர்ஃபான் பதான் மற்றும் யூசுஃப் பதான் ஆகியோருடன் பேசுகையிலேயே இதனை அவர் கூறியுள்ளார். மேலும் இது வீரர்களுக்கு அவர்களின் விளையாட்டு யுக்திகளை வளர்க்கவும் மற்றும் உடலை தொடர்ந்தும் விளையாடுவதற்கு ஏதுவாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும் எனவும் தெரிவித்தார். இவர் அண்மைக்காலமாக IPL கிரிக்கட் தொடர்களில் மாத்திரம் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
IbnuSiddeeq