மசீஹ் ஒரு சாதாரண உள்ளுர் பாடசாலையின் ஆசிரியர். மசீஹ் தனது குடும்பமான மனைவி 4பெண் குழந்தைகள் மற்றும் 3ஆண் குழந்தைகளோடு தனது காலத்தை கற்பித்தல், தோட்ட வேலை என மகிழ்ச்சியாக செலவிட்டார். காலப்போக்கில் தனது பொருளாதார நிலமை மோசமடைந்ததினால் மசீஹ் மிகவும் கஷ்டப்பட்டார். வேறு வழியின்றி தனது குடும்பத்திற்காக மசீஹ் கட்டிடத் தொழிலை நாடி ஈரானுக்குள் சட்டவிரோத பயணமொன்றை மேற்கொண்டார்.
மசீஹ் எப்படியோ வேலையில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் ஆன நிலையில்,
அன்று அதிகாலை 4மணியிருக்கும் வழமைக்கு மாறாக மசீஹினது மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்புவிடுக்கின்றார். ஆனால், அது அவர்கள் வழமையாக பேசுகின்ற நேரமுமல்ல. மசீஹ் தொலைபேசியை எடுத்து பேசிய போது அவரது மனைவியின் பேச்சில் ஏதோ ஒரு பீதி இருந்தது.
ஆப்கானிஸ்தானுடைய வர்டாக் மாகானத்திலிருந்தே ஆமினா தனது கனவனுக்கு அந்த அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அங்குதான் தனது கனவர் ஈரானினுடைய எல்லையில் பணியாற்றிய போது அவருக்கு உதவியாக அவரது பிள்ளைகளோடு வசித்து வந்தார்கள்.
ஆமினா அன்று அதிகலை ஏற்படுத்திய அழைப்பின் போது “நமது கிராமத்தை ஏதோ படைவீரர்கள் ரோந்துப்பணியிலும் சோதனையிலும் ஈடுபடுவதாகவும் சில பேர் ஆங்கிலத்தில் பேசுவதாகவும் சொன்னார்”. ஆமினா அடுத்த வினாடியிலேயே தொலைபேசியை நிறுத்த சொன்னார் ஆனால் மசீஹ் வேண்டாமென்றார்.
தொலைபேசி நின்றுவிட்டது.
காலை 9மணி மசீஹ் தனது மனைவி ஆமினாவுக்கு அழைப்பை மேற்கொண்டார் ஆனால் அவருடைய தெலைபேசி இயங்கவில்லை மீண்டும் அரைமணி நேரத்தின் பின்னர் அழைப்பை மேற்கொண்டார் அப்போது அதேதான். அந்த நாள் முழுவதும் தனது ஆசை மனைவிக்கு அழைப்பை தொடர்ந்து கொண்டே இருந்தார். அடுத்த நாளும் மசீஹ் அதை தொடர்ந்தார் ஆனால் தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டதாகவே இருந்தது.
அடுத்த நாள்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அவர் உறவினர்களை தொடர்பு கொண்டார் யாரும் சரியான பதிலளிக்கவில்லை. கடைசியாக அவரது சகோதரரிடம் வினவினார் அவரும் சரியாக பதிலளிக்கவில்லை. திரும்பவும் வலியுறுத்திக்கேட்டார் அப்போதுதான் அவர் சொன்னார் “அல்லாஹ் மீது பொறுப்பை சாட்டுங்கள்-உங்கள் குடும்பத்தில் எவருமே உயிரோடில்லை” என்று.

அன்று நடந்த வான்தாக்குதலினால் மசீஹினுடைய மனைவி ஆமினா, அவரது ஏழு குழந்தைகள் மற்றும் கூடவே தங்கியிருந்த உடன்பிறப்புக்களின் குழந்தைகள் என அனைவரும் பலியாகியிருந்தனர். அவரது கடைசி மகனுக்கு வெறும் நான்கே வயதுதான் ஆகியிருந்தது.

அதைத் தொடர்ந்து வந்ந வாரங்களில் மசீஹிற்கு கவலையும் கஷ்டங்களுமே உலகமாயின. ஆனால், மசீஹிற்கு உண்மையை எப்படியாவது கண்டறிந்துவிட வேண்டுமென்ற வெறியும் கூடவே இருந்தது.
அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் ஆப்கானிஸ்தானில் இப்படி மசீஹினுடைய சம்பவங்கள் போல தினமும் நடக்கின்றது. தலிபான்களுடைய சண்டையில் தலிபான் போராளிகளை விட அப்பாவி பொதுமக்களே அதிகமாக இறக்கின்றனர் என்பது மிகவும் வேதனைக்குறிய விடயமாகும்.
ஒரு குண்டு 11குழந்தைகள் பலி.
மசீஹினுடைய குடும்பத்தின் மரணத்தின் பின்னனியில் உள்ள விடயங்களை அலசுகின்ற போதுதான் ஏராளமான உண்மைகள் ஆப்கானிய யுத்தத்தில் மறைக்கப்படுகிறதென்பது அம்பலமாகியது.
தொடரும். பாகம்2
Author – Jessika purkiss
தமிழில் – அபு உமர்