நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உள்நாட்டு பால்மாவை இறக்குமதி பால்மாவின் விலைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்களான மில்கோ, பெல்வத்தை, நெஸ்லே லங்கா நிறுவனங்கள் விவசாய அமைச்சின் ஊடாக நிதியமைச்சுக்கு விடுத்த வேண்டுகோளின் பேரில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் ஏப்ரல் 28 ஆம் திகதி அனுப்பப்பட்ட போதும், இந்த விலையதிகரிப்புக்கான வர்த்தமான இதுவரை பிரசுரமாகவில்லை எனத் தெரியவருகிறது.
இதேவைளை, 345 ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா பக்கற்றின் விலை 380 ரூபாவாகவும், 860 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றின் விலை 945 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ ஸ்ரீலங்காவின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
-meelparvai-